டெல்லி நிரூபயா போல மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற கும்பல்

டெல்லி நிரூபயா போல அரியானா மாநில மாணவி கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நிரூபயா போல மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற கும்பல்
Published on

சண்டிகார்:

டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிரூபயா என்ற மாணவியை பஸ்சில் கடத்தி சென்று ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்து கொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்ற சம்பவம் ஒன்று இப்போது அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜன்சா என்ற கிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளி மகள் ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த தொழிலாளிக்கு மொத்தம் 3 குழந்தைகள். அதில் மூத்தவர் தான் இந்த மாணவி.

15 வயது நிரம்பிய அவர் திடீரென 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவர் அந்த ஊரைச்சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. எனவே அவர் மீது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தையல் தொழிலாளி போலீசில் புகார் கொடுத்தார்.

இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் அந்த மாணவி பிணமாக மிதந்தார்.

இதுபற்றி அறிந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும், ஒரு கும்பலால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்த மாணவியை கற்பழித்து கொன்றது மட்டுமல்லாமல் மிக கொடூரமாகவும் நடத்தியிருந்தனர். அவரது உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தப்பட்ட நிலையில் இருந்தது. நுரையீரல் பகுதி முற்றிலும் சிதைந்து இருந்தது. எனவே ஒன்றுக்கும் மேற்பட்டோர் அவரை கற்பழித்து கொடூரமாக கொன்றது தெரியவந்தது.

அவரை அழைத்து சென்ற வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவருக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. அந்த வாலிபர் மாணவியுடன் சென்றபோது மர்ம கும்பல்கள் மாணவியை மட்டும் இழுத்துச்சென்று இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி உடலை பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com