மீஞ்சூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி

மீஞ்சூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 17) ஏ.சி மெக்கானிக். கடந்த 2 வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

அத்திப்பட்டு புதுநகர் முழுவதும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் தொற்று நோய் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள குற்றம்சாட்டி உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com