ராணுவம் உள்ளிட்ட 4 அமைச்சக இணையதளம் முடக்கப்படவில்லை - தேசிய தகவலியல் மையம்

ராணுவம், உள்துறை, சுகாதாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சகங்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்படவில்லை அது தொழில்நுட்ப கோளாறு மட்டுமே என தேசிய தகவலியல் மையம் தெரிவித்துள்ளது. #NIC
ராணுவம் உள்ளிட்ட 4 அமைச்சக இணையதளம் முடக்கப்படவில்லை - தேசிய தகவலியல் மையம்
Published on

புதுடெல்லி:

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரத்யேக இணையதளம் இன்று மாலை செயல்படவில்லை. சீன மொழி மற்றும் இந்தியில் அதில் இடம்பெற்றிருந்தன. இதனால், இணையதளம் சீன ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் இணையதளமும் செயல்படவில்லை.

சிறிது நேரத்திற்கு பின்னர் சுகாதார அமைச்சம் மற்றும் சட்ட அமைச்சகத்தின் இணையதளமும் இயங்கவில்லை. இந்நிலையில், மேற்கண்ட இணையதளங்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை என தேசிய தகவலியல் மையம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இணையதளங்கள் செயல்படவில்லை, கோளாறுகளை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com