தினகரனை வாழ்த்தியதாக போலியான டுவிட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

தினகரனை வாழ்த்தியதாக போலியான டுவிட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளதாக வெளியானது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் புகார் அளித்துள்ளார்.
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் அமோக வெற்றி பெற்றார். அவர் ஆளும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விழ்த்தினார். தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற தினகரனுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதற்கிடையே தினகரனுக்கு அமைச்சர் உதயகுமார் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தினகரனை வாழ்த்தவில்லை. டுவிட்டரில் தனது பெயரில் வெளியான செய்திக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டுவிட்டரில் போலியாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கமி‌ஷனர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகாரும் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com