

சென்னை:
சென்னை மாநகராட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் மழை நிவாரண பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்கள்.
அதன் பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் போர்க் கால அடிப்படையில் நடை பெறுகிறது.
சென்னையில் 30-ந்தேதி முதல் இன்று வரை 43.75 செ.மீட்டர் அளவுக்கு கன மழை பதிவாகியுள்ளது. இதனால் தேங்கிய மழை நீர் 315 இடங்களில் 167 மோட்டார் பம்புகள் மூலம் அகற்றப்பட்டது. இன்னும் 115 இடங்களில் மழை நீர் அகற்றும் பணி நடக்கிறது.
இதுவரை விழுந்த 81 மரங்கள் அகற்றப்பட்டது. 96 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுகிறது. கால்வாய் அடைப்புகளையும் குப்பைகளும் வேகமாக அகற்றப்படுகிறது.
22 சுரங்கப் பாதைகளில் மழை நீரும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெறுகிறது.
நிவாரண முகாம்களில் இதுவரை 2280 தங்கியுள்ளனர். கடந்த 30-ந்தேதி முதல் இன்று வரை 1,81,605 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி 5,667 புகார்கள் பெறப்பட்டதில் 4,027 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆற்று படுகையில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.