

மதுரை:
மதுரை விளாங்குடியில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்வை வளமாக்கும் பல்வேறு திட்டங்களை தந்தவர் மறைந்த முதல்-அமைச்சர் அம்மா அவர்கள்.
அவர் வழியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மாணவர்கள், இளைஞர்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்து வருகிறார். எனவே தான் 1½ கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க. இயக்கத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வமாக சேர்ந்து வருகிறார்கள்.
தி.மு.க.வில் உள்ள இளைஞர்களுக்கு பதவியும் கிடைக்காது. எதிர்காலமும் இல்லை. அங்கே அவர்களது வாரிசுகள்தான் பதவிக்கு வரமுடியும். ஆனால் அ.தி.மு.க.வில் உழைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் எதிர்காலம் உண்டு.
தேடி வந்து இளைஞர்களுக்கு பதவியை கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இதை உணர்ந்த காரணத்தால்தான் அ.தி. மு.க.வில் இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். எனவே இந்த அரசுக்கும், ஆட்சிக்கும் இளைய சமுதாயம் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், சோலைராஜா, பரவை ராஜா, கறிக்கடை முத்துக்கிருஷ்ணன், பாஸ்கரன், பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.