அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனிமைப்படுத்திக்கொண்டார்

மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒருவாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.
அமைச்சர் ஓஎஸ் மணியன்
அமைச்சர் ஓஎஸ் மணியன்
Published on

நாகை:

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 28ந்தேதி உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஓரடியம்புலத்தில் அமைச்சரின் மனைவி கலைச்செல்வி இறுதிச்சடங்கு நடந்தது. இறுதிச்சடங்கில் உறவினர்கள், அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒருவாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com