12 அமாவாசைகளை தாண்டியும் அ.தி.மு.க. அரசு நடந்து வருகிறது- எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

அதிமுக அரசு 12 அமாவாசைகளை தாண்டியும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியுள்ளார். #admkgovt #mrvijayabaskar
12 அமாவாசைகளை தாண்டியும் அ.தி.மு.க. அரசு நடந்து வருகிறது- எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
Published on

கரூர்:

கரூர் காதப்பாறை, நெரூர், சோமூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கலந்து கொண்டு உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

காதப்பாறையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களால் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இதனால்தான் தமிழகம் இன்று முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சி ஒரு அமாவாசை, 2 அமாவாசையில் முடிவடைந்து விடும் என்று பலரும்கூறினார்கள். ஆனால் 12 அமாவாசைகளை தாண்டி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இன்னும் 3 ஆண்டு ஆட்சியையும் முழுமையாக பூர்த்தி செய்வோம். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும். ஜெயலலிதா செயல்படுத்திய பெண்களுக்கான திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினர். #tamilnews #admkgovt #mrvijayabaskar

X

Maalai Malar
www.maalaimalar.com