ஜோலார்பேட்டையில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு 800 டன் அரிசி- அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தனது சொந்த செலவில் அரிசி வழங்கினார்.
அமைச்சர் கேசிவீரமணி அரிசி வழங்கிய காட்சி.
அமைச்சர் கேசிவீரமணி அரிசி வழங்கிய காட்சி.
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தனது சொந்த செலவில் 800 டன் அரிசி வழங்கும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் சிவன் அருள் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் மாவட்ட எஸ்பி விஜயகுமார் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 72 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 8 ஆயிரம் குடும்ப அட்டை இல்லாதவர்கள் என 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் 800 டன் அரிசி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் குமார், முன்னாள் யூனியன் தலைவர் ரமேஷ், நகராட்சி கமி‌ஷனர் ராமஜெயம், பி.டி.ஓ. பிரேம்குமார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com