அரசு மருத்துவமனைக்கு 10 கட்டில்கள்- அமைச்சர் கே.சி.வீரமணியிடம் வழங்கினர்

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 10 கட்டில்களை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் வழங்கினர்.
10 கட்டில்களை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் வழங்கிய காட்சி.
10 கட்டில்களை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் வழங்கிய காட்சி.
Published on

திருப்பத்தூர்:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு மருத்துவமனையில் தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது. அதற்கு திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 10 கட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கோபன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். பொருளாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 10 கட்டில்கள் வழங்கினார்கள். அதனை அமைச்சர் கே.சி.வீரமணி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் டாக்டர் லீலா சுப்பிரமணியம், கணேஷ்மல், சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார் மருத்துவ அலுவலர் டாக்டர் திலீபன், டாக்டர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கே.எம்.டி. சுபாஷ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com