தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது விஜயேந்திரர் எழுந்திருக்காதது தவறு தான்: அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடிய போது விஜயேந்திரர் எழுந்திருக்காதது தவறு தான் என கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது விஜயேந்திரர் எழுந்திருக்காதது தவறு தான்: அமைச்சர் கடம்பூர் ராஜு
Published on

கோவில்பட்டி:

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும், இது தமிழை அவமதிப்பதான செயல் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும், கட்சி தலைவர்களும், மாணவர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடிய போது விஜயேந்திரர் எழுந்திருக்காதது தவறு தான். அப்போது அவர் தியானத்தில் இருந்ததாக கூறுகிறார்கள். எந்த நிலையில் இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அவர் எழுந்திருக்க வேண்டும். ஏன் எழுந்திருக்கவில்லை என அவர் தான் விளக்க வேண்டும் என்று கூறினார். #Tamilnews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com