ஜூலை 11-ந்தேதி எம்.எல்.ஏக்களுக்கு மீன் விருந்து: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

மீன்வளத்துறை மானிய கோரிக்கை தினத்தில் (ஜூலை 11-ந்தேதி) சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ருசியான இடிந்தகரை மீன் வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11-ந்தேதி எம்.எல்.ஏக்களுக்கு மீன் விருந்து: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை (அ.தி.மு.க) பேசுகையில், “நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் மீன்களை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே மிகவும் ருசியான மீன் இடிந்தகரையில் பிடிக்கப்படும் மீன்கள்தான், எனவே அங்கு குளிர்பதன கிடங்கு அமைந்தால் ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் “இடிந்தகரை மீன் மிகவும் ருசியாக இருக்கும் என்று உறுப்பினர் கூறுகிறார். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இடிந்தகரை மீன் கிடைக்க ஏற்பாடு செய்வாரா? என்றார்.

அப்போது மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் பதில் அளிக்கையில், “மீன்வளத்துறை மானிய கோரிக்கை தினத்தில் (ஜூலை 11-ந்தேதி) சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ருசியான இடிந்தகரை மீன் வழங்கப்படும். அது பொறித்த மீனா? குழம்பு மீனா அல்லது சமைக்காத மீனா? என்பது அப்போது தெரியும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com