10ம் வகுப்பு படித்த மீனவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
10ம் வகுப்பு படித்த  மீனவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

கடலூர் பகுதியில் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு ரூ.116 கோடி ஒதுக்கியுள்ளது. இது தவிர 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வேலைக்கான பயிற்சியும் 20 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com