எங்களை எதிர்த்து வழக்கு போட முடியாது: தினகரன் அறிவிப்புக்கு ஜெயக்குமார் கண்டனம்

பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று எங்கள் மீது வழக்கு தொடர டி.டி.வி. தினகரனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எங்களை எதிர்த்து வழக்கு போட முடியாது: தினகரன் அறிவிப்புக்கு ஜெயக்குமார் கண்டனம்
Published on

சசிகலாவை தவிர பொதுக்குழுவை கூட்ட வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

இதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடியாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நாங்கள் 12-ந்தேதி பொதுக்குழுவை கூட்டயிருக்கிறோம். பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று எங்கள் மீது வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை. 3-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் கூட்டம் நடக்கும்.


பொதுக்குழுவை கூட்டுவதை எதிர்க்க டி.டி.வி. தினகரனுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழு பணிகள் 100 சதவீதம் ஒற்றுமையாக நடந்து வருகின்றன.

தினகரனின் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டுப்படுத்தாது. ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரனுக்கு தொடர்பில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com