

சென்னை:
ஜெயலலிதா தொடர்பான வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி உள்நோக்கத்துடன் ஜெயலலிதா தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் தொடர்பாக வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்களிடம் இருக்கும் ஆதாரம் குறித்து விசாரணை ஆணையத்திடம் கூறாமல் தன்னிச்சையாக வீடியோவை வெளியிட்டுள்ளனர். பாதுகாப்பு விதிமுறையை மீறி எப்படி வீடியோ எடுக்க முடியும்? யார் எடுத்தது? இந்த வீடியோ எப்போது எடுக்கப்படடது என்பது தொடர்பான விவரம் இல்லை. 75 நாட்கள் சிகிச்சையின்போதுதான் வீடியோ எடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?
ஜெயலலிதாவின் புகழை சீர்குலைப்பதற்கு சசிகலா குடும்பத்தினர் செய்த சதியை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலா குடும்பம் பெரும் பிரச்சனையாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.