ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இன்னும் 3 மாதத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Published on

திண்டுக்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

உழைப்பால் உயர்ந்த எம்.ஜி.ஆர். தனது ஈகை குணத்தால் தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். 45 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண நபராக இருந்த நான் வனத்துறை அமைச்சராகி இருக்கிறேன்.

அ.தி.மு.க.வில் உண்மையாக உழைப்பவர்கள் நல்ல நிலைமைக்கு வருவார்கள். ஆனால், குறுக்கு வழியில் வந்த ஒருவர் 3 மாதத்தில் ஆட்சியை கலைப்பேன் என்கிறார். 3 மாதத்துக்கு அவர் இருந்தால் தானே, ஆண்டவன் பார்த்து கொள்வான் என்று முதல்-அமைச்சர் பதிலளித்தார்.


எனவே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரலாம். வந்தால் அதையும் சந்திப்போம். அனைவரும் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com