போயஸ் இல்லத்திற்கு, வாரிசுதாரர்கள் உரிமை கோரினால் உரிய இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

போயஸ் இல்லத்திற்கு, வாரிசுதாரர்கள் உரிமை கோரினால் உரிய இழப்பீடு தொகையை கொடுத்து வீட்டை நினைவிடம் ஆக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
போயஸ் இல்லத்திற்கு, வாரிசுதாரர்கள் உரிமை கோரினால் உரிய இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
Published on

சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டை நினைவிடம் ஆக்க போவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும் அதில் சட்ட சிக்கல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அந்த வீட்டுக்கு வாரிசுதாரர், உரிமையாளர் யார் என்பதை சட்டப்படி அறிந்து அவர்களுக்கு இழப்பீடு தொகையை கொடுத்து வீட்டை நினைவிடம் ஆக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com