தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் மயக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் மயக்கம்
Published on

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திந்திரிணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்ட விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டவிழா இன்று நடைபெற்றது.

காலை 9.45 மணிக்கு தேர் அருகில் உள்ள மேடையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாலும், வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென்று மயக்கம் அடைந்தார்.

அப்போது அருகில் இருந்த தொண்டர்கள் அவரை பிடித்துக் கொண்டு விசிறி வீசினர். பின்னர் சிறிதுநேரம் கழித்து தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சி.வி.சண்முகம் தேரை வடம் பிடித்து தொடங்கிவைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com