ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்- 43 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 43 பேர் கொல்லப்பட்டனர். #KabulAttack
ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்- 43 பேர் பலி
Published on

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். அரசு அலுவலக நுழைவு வாயில் அருகே காரை ஓட்டி வந்த பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். கார் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 2 பயங்கரவாதிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

உள்ளே செல்லும்போது பொதுமக்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டபடியே சென்றதால், பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அலுவலகத்திற்குள் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com