காஷ்மீரில் பயங்கரவாதிகள் ரகசிய பதுங்குமிடம் கண்டுபிடிப்பு - ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் இயந்திர துப்பாக்கிகள், தோட்டாக்கள், சாட்டிலைட் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், சோபோர் அருகாமையில் உள்ள ரபியாபாத் பகுதியில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்குமிடத்தை கண்டுபிடித்தனர்.