அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்றார் மைக் பாம்பியோ

அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், அமெரிக்காவின் 70-வது வெளியுறவு துறை மந்திரியாக மைக் பாம்பியோ பதவியேற்றுக் கொண்டார். #MikePompeo
அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்றார் மைக் பாம்பியோ
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநராக பதவி வகித்து வந்தவர் மைக் பாம்பியோ. அதிபர் டிரம்பின் நம்பிக்கையை பெற்ற இவர் வெளியுறவு துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், ஜனநாயக கட்சி இவரது பதவிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது வெளியுறவு துறை மந்திரியாக பாம்பியோ நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

நேட்டோ நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் மாநாடு, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்த வாரம் நடைபெற உள்ள நிலையில், பாம்பியோவுக்கு இப்பதவி கிடைத்திருக்கிறது.

அமெரிக்க செனட்டின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, அமெரிக்காவின் 70-வது வெளியுறவு துறை மந்திரியாக மைக் பாம்பியோ பதவியேற்றுக் கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள பாம்பியோ, பிரஸ்ஸல்ஸ், ரியாத், ஜெருசலேம் மற்றும் அம்மான் ஆகிய நாடுகளுக்கு அவர் உடனடியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுக்குப் பதிலாக, முன்னாள் சிஐஏ இயக்குநர் மைக் பாம்பியோவை நியமிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #MikePompeo #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com