ராஜஸ்தானில் மிக் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி தப்பினார்

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் இன்று மதியம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #MIG23crashed #BikanerMIG23crashed
ராஜஸ்தானில் மிக் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி தப்பினார்
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள நல் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று மதியம் MIG 23 ரகத்தை சேர்ந்த ஒரு போர் விமானம் புறப்பட்டுச் சென்றது.

அம்மாவட்டத்தின் மேலே பறந்து சென்றபோது மதியம் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.  அதில் சென்ற ஒரு விமானி அவசர கதவு வழியாக பாராசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார்.

இவ்விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #MIG23crashed  #BikanerMIG23crashed 

X

Maalai Malar
www.maalaimalar.com