முள்ளக்காட்டில் நள்ளிரவில் புரோட்டா கடை சூறை

முள்ளக்காட்டில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கு இருந்த பொருட்களை சூறையாடினர். இந்த சம்பம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
முள்ளக்காட்டில் நள்ளிரவில் புரோட்டா கடை சூறை
Published on

முள்ளக்காடு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் அப்துல்ஜப்பார். இவர் முள்ளக்காடு மெயின் ரோட்டில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு வழக்கம்போல கடையை அடைத்துவிட்டு ஆத்தூர் சென்றார்.

இன்று காலை கடையை திறப்பதற்காக அப்துல் ஜப்பார் சென்றார். அப்போது கடை சூறையாடப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  நள்ளிரவில்  மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைக்க முயன்று முடியாததால் வெளியே வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர்.   

இது குறித்து அப்துல் ஜப்பார் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் முள்ளக்காடு வியாபாரிகள் சங்கம் சார்பிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com