விண்டோஸ்-இல் இருந்து 'எலிமினேட்' செய்யப்படும் பெயின்ட்

விண்டோஸ் இயங்குதளத்தின் பாரம்பரிய பெயின்ட் செயலி இனி வெளிவர இருக்கும் புதிய பதிப்புகளில் இருந்து எலிமினேட் செய்யப்படும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
விண்டோஸ்-இல் இருந்து 'எலிமினேட்' செய்யப்படும் பெயின்ட்
Published on

வாஷிங்டன்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 1.0 பதிப்பில் இருந்து இன்றுவரை பலருக்கும் பயன்தரும் செயலியாக பெயின்ட் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் இனி அவ்வாறு இருக்காது என்கிறது.  

விண்டோஸ் 10 ஃபால் கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் (Windows 10 Fall Creators Update) இருந்து நீக்கப்படும் அம்சங்களில் பெயின்ட் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இனிமேல் வெளிவரும் அப்டேட்களில் இருந்து பெயின்ட் நிரந்திரமாக நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  

விண்டோஸ் இயங்குதளத்தில் 32 ஆண்டுகளாய் இடம்பிடித்துள்ள பெயின்ட் விண்டோஸ்-இல் இருந்து நீக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் அந்நிறுவனம் 3D பெயின்ட் அறிமுகம் செய்திருந்தது. 

புதிய 3D பெயின்ட் செயலியில் பழைய பெயின்ட் செயலியில் வழங்கப்பட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. 3D பெயின்ட் செயலியில் 3D பொருட்களை சேர்க்க வழி செய்கிறது. என்ன தான் புதிய செயலியானாலும் பல ஆண்டுகளாய் பயன்படுத்தப்பட்டு வரும் பெயின்ட் நீக்கப்படுவது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மிகவும் எளிமையாய் பயன்படுத்தக் கூடிய செயலியாக இருக்கும் பெயின்ட் இன்று வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய டிராயிங் செயலியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com