சீன மொழியை துல்லியமாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் புதிய கருவி

சீன மொழியை மனிதர்களை போல துல்லியமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி உள்ளது. #microsoft #artificialintelligence
சீன மொழியை துல்லியமாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் புதிய கருவி
Published on

மொழிப்பெயர்க்க உதவும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர் உட்பட பல ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆராய்ச்சியில் மிகப்பெரிய மைல் கல்லை அடைந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீன மொழி செய்திகளை துல்லியமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் புதிய கருவியை கண்டறிந்துள்ளனர். இந்த கருவி மனிதர்களை போன்று தெளிவான மொழிபெயர்ப்பை தரும். இந்த ஆராய்ச்சிக்கு பலர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மொழிபெயர்ப்பு, இந்த புதிய கருவி தரும் மொழிபெயர்ப்பை ஒத்து இருந்தது. மேலும் கருவி இரு பக்கமாக செயல்படும் திறன் கொண்டது. அதாவது சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து சீன மொழிக்கும் மாற்றும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com