100-நாள் ரீபிளேஸ்மெண்ட் வாரண்டி வழங்கும் மைக்ரோமேக்ஸ்

100-நாள் ரீபிளேஸ்மெண்ட் வாரண்டி வழங்கும் மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பீச்சர் போன்களுக்கு 100-நாள் ரீபிளேஸ்மெண்ட் வாரண்டி வழங்குவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Published on

புதுடெல்லி:

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பீச்சர் போன் மாடல்களுக்கு 100-நாள் ரீபிளேஸ்மெண்ட் வாரண்டி வழங்குவதாக மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. 

மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ள புதிய வாரண்டியின் கீழ் பீச்சர் போன்களில் ஏற்படும் ஹார்டுவேர் சார்ந்த பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்றும், பிரச்சனை ஏற்படும் போனுக்கு பதிலாக அதே மாடல் அல்லது அதற்கு சமமான மொபைல் போன் வழங்கப்படும். 

மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ள ரீபிளேஸ்மெண்ட் சலுகை முதற்கட்டமாக பத்து பீச்சர்போன்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மைக்ரோமேக்ஸ் X1i, மைக்ரோமேக்ஸ் X706, மைக்ரோமேக்ஸ் X424, மைக்ரோமேக்ஸ் X740, மைக்ரோமேக்ஸ் X730, மைக்ரோமேக்ஸ் X904, மைக்ரோமேக்ஸ் X570, மைக்ரோமேக்ஸ் X512, மைக்ரோமேக்ஸ் X412 மற்றும் மைக்ரோமேக்ஸ் X726 போன்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த சலுகையை பெற மொபைல் போன் ஆக்டிவேட் செய்யப்பட்டு 100-நாட்களுக்குள் இருக்க வேண்டும். இந்த பீச்சர் போன் வாரண்டியில் இருக்க வேண்டும், இத்துடன் போனின் மென்பொருள் மூலம் சரி செய்யப்பட முடியாத பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே ரீபிளேஸ்மெண்ட் செய்யப்படும். 

ரீபிளேஸ்மெண்ட் வாரண்டியில் எடுத்துக் கொள்ளப்படும் மொபைல் போன்களின் ஹார்டுவேர் பிரச்சனை மட்டுமே சரி செய்யப்படும் அல்லது பிரச்சனை ஏற்பட்ட மைக்ரோமேக்ஸ் போனிற்கு சமமான மொபைல் போன் வழங்கப்படும்.  

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பீச்சர் போன்களும் ஒரு வருட வாரண்டியுடன் வழங்கப்படுகிறது, மேலும் வாரண்டியில் இருக்கும் போது மட்டுமே ரீபிளேஸ் செய்யப்படும். நாடு முழுக்க சுமார் 1,000 சர்வீஸ் சென்டர்களை மைக்ரோமேக்ஸ் இயக்கி வருவதாக தெரிவித்துள்ளது. 

மேலும் கடந்த எட்டு மாதங்களில் 68 சதவிகித வாடிக்கையாளர்களின் குறை ஒரே நாளில் சரி செய்யப்பட்டு விட்டது என்றும் 90 சதவிகித குற்றச்சாட்டுகள் ஏழே நாட்களில் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com