மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர் இருப்பு 9.84 டிஎம்சி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர் இருப்பு 9.84 டிஎம்சி
Published on

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 407 கன அடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 685 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் நீர் மட்டம் 35.40 அடி என்ற நிலையில் இருந்தது. 9.84 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com