மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாளில் 2 அடி சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Published on

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

கடந்த 5-ந் தேதி 19ஆயிரத்து 333 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 10 ஆயிரத்து 31 கனஅடியாக சரிந்தது. இன்று 10 ஆயிரத்து 396 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 22ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த 5-ந் தேதி 118.71 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 117.60 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 116.90 அடியாக குறைந்தது. இதனால் கடந்த 3 நாட்களில் சுமார் 2 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com