மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் ஒரு அடி சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 116.24 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 115.67 அடியானது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Published on

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று 13 ஆயிரத்து 404 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 11 ஆயிரத்து 919 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரியில் 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று முன்தினம் 116.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 116.24 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 115.67 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com