மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,977 கனஅடியில் இருந்து 5,915 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Published on

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து தற்போது காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீரின் வரத்தை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,977 கனஅடியில் இருந்து 5,915 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 65.97 அடியாக உள்ளது. நீர் இருப்பு 29.33 டி.எம்.சி., டெல்டா பாசனத்திற்காக 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com