மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 11 ஆயிரத்து 402 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 13 ஆயிரத்து 47 கன அடியாக அதிகரித்தது. #MetturDam
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சேலம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று 11 ஆயிரத்து 402 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 13 ஆயிரத்து 47 கன அடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கன அடி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 103.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை104.18 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com