பிரிட்டன் இளவரசர் ஹாரி திருமணத்தில் மேகன் மார்க்லே தந்தை பங்கேற்கவில்லை

பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணத்தில் மார்க்லேவின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகி உள்ளது. #PrinceHarry #MeghanMarkle
பிரிட்டன் இளவரசர் ஹாரி திருமணத்தில் மேகன் மார்க்லே தந்தை பங்கேற்கவில்லை
Published on

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.

இந்த ஜோடியினர் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. திருமணம் முடிவு செய்ததில் இருந்து மார்க்லே குடும்பத்திலிருந்து பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. மார்க்லேவின் சகோதரர் இந்த திருமணத்தை நிறுத்துங்கள் என இளவரசர் ஹாரிக்கு கடிதம் எழுதினார். குடும்பத்தைச் சேர்ந்த பலரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில், மேகனின் தந்தை தாமஸ் மார்க்லே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரால் திருமணத்திற்கு வரமுடியாது என தகவல்கள் வெளியாகின.

X

Maalai Malar
www.maalaimalar.com