திருமணத்தை உடனே நிறுத்துங்கள் - இளவரசர் ஹாரிக்கு மார்க்லேயின் சகோதரர் கடிதம்

திருமணத்தை உடனே நிறுத்துங்கள் என மார்க்லேயின் சகோதரர் தாமஸ் இளவரசர் ஹாரிக்கு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MeghanMarkle #PrinceHarry
திருமணத்தை உடனே நிறுத்துங்கள் - இளவரசர் ஹாரிக்கு மார்க்லேயின் சகோதரர் கடிதம்
Published on

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி, கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், மேகன் மார்க்லேயின் சகோதரர்  தாமஸ் பென்ஸ் இளவரசர் ஹாரிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மெர்க்கல் பற்றி எழுதியுள்ள விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், நடக்கவிருக்கும் உங்களது திருமணத்தை நிறுத்திவிடுங்கள். மார்க்கலே வாழ்க்கையில் ஆழமில்லாத பெண் ஆவாள். மேலும் அதிகமாக கற்பனையில் வாழ்பவள். அவளைப்பற்றி உலகமே அறிந்து கொண்டிருக்கையில், நீங்கள் மட்டும் ஏன் மெர்க்கலின் சுயரூபதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள். அவள் உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவள். இந்த திருமணம், இங்கிலாந்து ராயல் திருமண வரலாற்றில் மிகப்பெரிய தவறு ஆகும் என எழுதியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com