பிரிட்டன் இளவரசர் ஹாரி முதல் குழந்தைக்கு தந்தையாகிறார்

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி கருவுற்றிருப்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ள சூசெக்ஸ் அரண்மனை வரும் வசந்தகாலத்தில் புது வரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. #MeghanandHarry #Meghanpregnant
பிரிட்டன் இளவரசர் ஹாரி முதல் குழந்தைக்கு தந்தையாகிறார்
Published on

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) கடந்த மே மாதம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது மேகன் மார்கல் கருவுற்றிருப்பதை சூசெக்ஸ் அரண்மனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த (2019) ஆண்டின் வசந்தகாலத்தில் (மார்ச் முதல் மே மாதம் வரை) தங்கள் அரண்மனையின் குட்டி அரசகுமாரனை எதிர்ப்பார்ப்பதாக சூசெக்ஸ் அரண்மனை வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com