

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மும்பையில் உள்ள இரு பிரபல ஓட்டல்களில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லலித் ஓட்டலில் தங்கியுள்ள சிவசேனா எம்.எல்.ஏ.க்களை அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினார்.