

தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் விலாஸ் ரிக்கலா. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் இப்போது ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
விவசாயியான இவர், சமீபத்தில் துபாய்க்கு வேலை தேடி சென்றுள்ளார். அங்கு வேலை எதுவும் அமையாததால், விரக்தியில் மீண்டும் ஊருக்கு திரும்ப தயாராகிவிட்டார்.
ஊருக்கு செல்வதற்கு முன் துபாய் பிக் டிக்கெட் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்க வேண்டும் என எண்ணியுள்ளார். தனது மனைவிக்கு போன் செய்து டிக்கெட் வாங்க பணம் ஏற்பட்டு செய்யுமாறு கூறியுள்ளார். நண்பர் உதவியுடன் பணத்தை மனைவியிடம் இருந்து பெற்று, ஒரு லாட்டரி சீட்டை வாங்கிவிட்டு ஊர் திரும்பியுள்ளார்.
இது குறித்து ரிக்கலா கூறுகையில், 'நான் முன்னதாக ஒருமுறை துபாயில் டிரைவராக பணியாற்றி இருக்கிறேன். அப்போது சீட்டு வாங்குவேன். என்னிடம் பணம் இல்லாததால், மனைவியிடம் கேட்டேன். நண்பர் ரவி மூலம் கொடுத்தனுப்பினார். இதற்கு முழு காரணமும் என் மனைவிதான்' என மழ்கிச்சியுடன் கூறினார்.