அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு 101 இடங்கள் அதிகரிப்பு

அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு 101 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 1585 இடங்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு 101 இடங்கள் அதிகரிப்பு
Published on

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு 1484 இடங்கள் உள்ளன.

இந்த ஆண்டு இடங்களை அதிகரிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் கோரிக்கை வைத்திருந்தது.

இதை ஏற்று 101 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 1585 இடங்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மருத்துவ பட்டதாரிகள் (எம்.பி.பி.எஸ்.) இந்த படிப்பில் சேர தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட உள்ளன. மீதி 50 சதவீத இடங்களுக்கு தமிழக மருத்துவ மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com