கோவையில் எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவையில் எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on: 

கோவை கணபதி 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் அருண்குமார் (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு தற்கொலை செய்து கொண்ட அருண்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com