4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கு மாயாவதி வரவேற்பு

மத்திய அரசு 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வரவேற்று உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
Published on

மத்திய அரசு 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை நேற்று முன்தினம் அறிவித்தது. இதை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வரவேற்று உள்ளார்.

இது தொடர்பாக அவர் இந்தியில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விஷயத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் ஏற்கனவே வற்புறுத்தி வந்தது.

அதன்படி, மத்திய அரசின் முன் அனுமதி இல்லாமல் மாநிலங்கள் தன்னிச்சையாக ஊரடங்கை அறிவிக்க முடியாது என்று உள்துறை அமைச்சகத்தின் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில், இந்த தளர்வு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனாவை வைத்து அரசியல் செய்வதற்கும் முடிவு கட்டும்” என்று கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com