பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு

உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
மாயாவதி
மாயாவதி
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்க்கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டெல்லியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. மேலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com