புலம்பெயர் தொழிலாளர்களின் வீடு அருகே வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால், அவர்களின் வீடு அருகிலேயே நிரந்தர வேலைவாய்ப்புக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாயாவதி கூறியுள்ளார்.
மாயாவதி
மாயாவதி
Published on

லக்னோ

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். அவர்கள் வாழ்வாதாரம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

அவர்களின் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால், அவர்களின் வீடு அருகிலேயே நிரந்தர வேலைவாய்ப்புக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com