மேலூர் அருகே திருமணமான பெண்ணுக்கு துண்டு சீட்டில் காதல் மெசேஜ்- வாலிபர் கைது

திருமணமான பெண்ணுக்கு காதல் மெசேஜ் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on: 

மதுரை:

மேலூரை அடுத்த அ.வல்லாளப்பட்டியை சேர்ந்தவர் போஸ். இவரது மனைவி இலக்கியா (வயது 29). பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (33) என்பவர் இலக்கியாவிடம் அடிக்கடி பேசியுள்ளார்.

இந்த நிலையில் இலக்கியா சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்தபோது முருகன் ஒரு துண்டு சீட்டில் தனது செல்போன் எண்ணுடன் “ஐ லவ் யூ” என்று எழுதி அதனை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் போட்டுள்ளார்.

இதனை இலக்கியாவின் கணவர் பார்த்துள்ளார். இதையடுத்து பக்கத்து வீட்டுக்கு சென்று அங்கிருந்த முருகனிடம் அவர் தட்டிக் கேட்டார். அப்போது முருகனின் தாய் மல்லிகா (58) மகனுக்கு ஆதரவாக பேசினார். இதில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் நடந்தது. கைகலப்பும் ஏற்பட்டது. இதில் போஸ், இலக்கியாவுக்கு சரமாரி அடி விழுந்தது.

இது தொடர்பாக இலக்கியா மேலவளவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருக ராஜா வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவியை தாக்கிய முருகன், அவரது தாய் மல்லிகா ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com