தமிழ் நடிகையை மணம் முடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், கர்நாடக அணியின் கேப்டனுமான மணிஷ் பாண்டே தமிழ் நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
மணிஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி திருமணம்
மணிஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி திருமணம்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே. இவர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்றிரவு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா 1 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் மணிஷ் பாண்டே 45 பந்தில் 60 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

நேற்றிரவு போட்டியில் ஜொலித்த அவர், இன்று காலை மும்பையில் தமிழ் நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். அவர் இடம்பிடித்துள்ள ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com