கொரோனா பீதி: மியான்மர் நாட்டு எல்லையை மூடியது மணிப்பூர் அரசு

கொரோனா வைரஸ் பீதி அதிகரித்து வரும் நிலையில் அண்டைநாடான மியான்மர் எல்லைப்பகுதி மூடப்படுவதாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் அரசு இன்று அறிவித்துள்ளது.
மியான்மர் - மணிப்பூர் எல்லைப்பகுதி நுழைவு வாயில்
மியான்மர் - மணிப்பூர் எல்லைப்பகுதி நுழைவு வாயில்
Published on

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் அருகாமையில் உள்ள வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டு எல்லைப்பகுதிகளை மூடுவதாக மிஜோரம் அரசு நேற்று அறிவித்தது.

இதைதொடர்ந்து, அண்டைநாடான மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதி நுழைவு வாயில்கள் மூடப்படுவதாக மணிப்பூர் அரசு இன்று அறிவித்துள்ளது.

இப்பகுதிகள் வழியாக உள்ளூர் மக்கள் மியான்மருக்கு செல்லாதவாறும் மணிப்பூருக்குள் வெளிநாட்டினர் நுழையாதவாறும் கண்காணிக்குமாறு மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்படுவதாக அம்மாநில உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் கியான் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் அரசுகளும் தங்களது மாநிலங்களில் வெளிநாட்டினர் நுழைவதற்கு தடை விதித்துள்ளது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com