இப்ராஹிமோவிச் உடன் மான்செஸ்டர் மேலும் ஒரு வருடம் ஒப்பந்தம்

ஸ்வீடன் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான ஸ்லாடன் இப்ராஹிமோவிச் உடனான ஒப்பந்தத்தை மான்செஸ்டர் யுனைடெட் அணி மேலும் ஒரு வடத்திற்கு நீட்டித்துள்ளது.
இப்ராஹிமோவிச் உடன் மான்செஸ்டர் மேலும் ஒரு வருடம் ஒப்பந்தம்
Published on

2016-17 சீசனில் இப்ராஹிமோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 27 போட்டியில் 17 கோல்கள் அடித்திருந்தார். காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார்.

இதனால் மீண்டும் மான்செஸ்டர் அணியில் இடம்பிடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த மாதம் 31-ந்தேதியுடன் டிரான்ஸ்பர் பணி முடிகிறது. இந்நிலையில் காயம் முழுவதுமாக குணமடைந்து போட்டிக்கு தயாராகியுள்ள இப்ராஹிமோவிச்சை மேலும் ஒரு வருடத்திற்கு மான்செஸ்டர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com