மணவாளநகரில் 2 வீடுகளில் புகுந்து ரூ.10 லட்சம்-நகை கொள்ளை

மணவாளநகரில் 2 வீடுகளில் புகுந்து ரூ.10 லட்சம்-நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

சென்னை, ஜூலை. 19-

திருவள்ளூரை அடுத்த மண வாளநகர், கே.கே. நகரைச் சேர்ந்தவர் குமரவேல். மேல்நல்லாத்தூரில் உள்ள கார் தொழிற் சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு அவர் வீட் டின் கீழ் உள்ள அறையில் குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் வெளிப்புற படிக்கட்டு வழியாக கதவை உடைத்து மாடியில் உள்ள அறைக்குள் புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.7 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளிப் பொருட்கள், செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி தப்பி சென்று விட்டனர். அதிகாலையில் குமரவேல் எழுந்தபோது தான் வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

குமரவேல் தனது மகளை பல் மருத்துவ படிப்பில் சேர்ப்பதற்காக ரூ.7 லட்சத்தை வைத்து இருந்தார். அதனை கொள்ளை கும்பல் சுருட்டி சென்று விட்டனர்.

இதே போல் அருகில் உள்ள ஓட்டல் உரிமையாளர் லோகேஷ் என்பவரது வீட்டுக்குள்ளும் மாடி வழியாக கதவை உடைத்து கொள்ளையர்கள் புகுந்தனர்.

பீரோவை உடைத்து ரூ.3 லட்சம், 10 பவுன்நகை, ½ கிலோ வெள்ளிப் பொருட் களை அள்ளி தப்பினர்.

லோகேஷ் மற்றொரு அறையில் தூங்கியதால் கொள்ளையர்கள் வீட்டுக் குள் புகுந்தது அவருக்கு தெரியவில்லை. காலையில் எழுந்த பின்னரே அவருக்கும் வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது. இவரது வீட்டிலும் கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி இருந்தனர்.

இதுகுறித்து மணவாள நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் விரைந்து வந்து விசா ரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த 2 வீடுகளிலும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததால் கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்வ தில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே அடுத்தடுத்து 2 வீடு களில் கொள்ளை நடந்த சம்பவம் மணவாள நகர் பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com