U-17 உலக கோப்பை போட்டிக்கு விளம்பர பாடல் எழுதிய மம்தா பானர்ஜி

U-17 உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அதனை விளம்பரப்படுத்தும் விதமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பாடல் ஒன்றை எழுதி அசத்தியுள்ளார்.
U-17 உலக கோப்பை போட்டிக்கு விளம்பர பாடல் எழுதிய மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா:  

U-17 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று இந்தியாவில் தொடங்கியது. வருகின்ற 28 நடைபெறுகின்ற இந்த போட்டிகளில் இறுதிச்சுற்று உட்பட 10 போட்டியில் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இப்போட்டிகளை விளம்பரப்படுத்தும் விதமாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இப்பாடல் கால்பந்து விளையாட்டு குறித்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. மேலும், மக்களிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

இப்பாடலின் ஆடியோ செப்டம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அப்பாடலின் வீடியோ விரைவில் வெளியிடப்பட உள்ளது. இப்பாடல் துர்கா பூஜையின் போது பல இடங்களில் ஒலிக்கப்பட்டது.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதல் மந்திரி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்த பாடல் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com