பாரதிய ஜனதாவின் முடிவுக்கு ஆரம்பம் தொடங்கி விட்டது - மம்தா பானர்ஜி கருத்து

3 தொகுதி இடைத் தேர்தலில் தோல்வியை தழுவியதால் பாரதிய ஜனதாவின் முடிவுக்கு ஆரம்பம் தொடங்கி விட்டது என்று மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் முடிவுக்கு ஆரம்பம் தொடங்கி விட்டது - மம்தா பானர்ஜி கருத்து
Published on

கொல்கத்தா:

உத்தரபிரதேசம், பீகாரில் நடந்த 3 எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது. உ.பி.யில் அந்த கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி கட்சியினர் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறும்போது, “முடிவின் ஆரம்பம் தொடங்கி விட்டது” என்று தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த சிறந்த வெற்றியாகும். அகிலேஷ் யாதவ், லாலுபிரசாத் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முடிவின் ஆரம்பம் தொடங்கி விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com