மாலத்தீவு அதிபர் முஹம்மது சோலிஹ் நாளை இந்தியா வருகை

மாலத்தீவு நாட்டின் புதிய அதிபர் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். #MaldivesPresident #MohamedSolih #Modi
மாலத்தீவு அதிபர் முஹம்மது சோலிஹ் நாளை இந்தியா வருகை
Published on

புதுடெல்லி:

மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் 17-ம் தேதி இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு  முஹம்மது சோலிஹ்-க்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறை பயணமாக முஹம்மது சோலிஹ் நாளை டெல்லி வருகிறார்.

வரும் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவுடன் நட்பு வைத்துகொண்டே சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார்.

இந்நிலையில், அதிபராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வரும் முஹம்மது சோலிஹ் ஆட்சிக் காலத்தில் இந்தியா-மாலத்தீவு இடையிலான நட்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MaldivesPresident #MohamedSolih #Modi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com