

இந்திய போலீஸ் கழகம், நல்லாட்சிக்கான மத்திய அமைப்பு, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை ஒன்றாக இணைந்து ‘காவல் பணியில் கம்பீரம்’ என்னும் தேசிய கருத்தரங்கம் நிகழ்ச்சியை டெல்லியில் இன்று நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று உரையாற்றினார். பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவு தேடி வரும் முதல் இடம் காவல் நிலையம் என்பதால் தங்களது பிரச்சனை அங்கிருக்கும் காவல் துறையினரால் கவனிக்கப்படும், தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் உருவாக வேண்டும் என வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.